close
Choose your channels

சிம்புவின் முதல் 'காதல் தேவதை' யார்? செப் 1ல் அறிவிப்பு

Thursday, August 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அஜித் படத்தின் டிரைலர், விஜய் படத்தின் சிங்கிள் என பரபரப்புடன் இருக்கும் நிலையில் இந்த பரபரப்பில் தற்போது சிம்புவும் இணைந்து கொள்கிறார்.

சிம்பு ஒரு படத்தை தயாரித்து, இயக்கி நடித்தும் வருகிறார் என்பதும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி சிம்பு முதன்முதலாக இசையமைத்து வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விடிவி கணேஷ் உறுதி செய்துள்ளார்.

திரைப்படத்திற்காக முதன்முதலில் சிம்பு கம்போஸ் செய்த 'காதல் தேவதை' என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் இந்த படத்தின் ஹீரோ சந்தானத்தின் கனவுப்பாடல் என்றும், இந்த பாடல் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் விடிவி கணேஷ் கூறியுள்ளார். இந்த படத்தின் மேலும் மூன்று பாடல்களை டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.