close
Choose your channels

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் நடிப்பில் இருந்தே விலகவிருப்பதாகவும், இயக்கம், இசையமைப்பு என வேறு துறைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் சமூக இணையதளங்களில் வதந்திகள் உலாவி வருகின்றது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகியுள்ளது. ஆம், தற்போது சிம்பு, சந்தானம் நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் கம்போஸிங் பணியை கிட்டத்தட்ட அவர் முடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்புவின் இசையில் வெளியாகவுள்ள முதல் பாடலை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்பு நடிப்பை கைவிடப்போகிறார் என்று சமூக இணையதளத்தில் வெளிவரும் வதந்தி உண்மை இல்லை என்றும் அவருக்கு நடிப்பை கைவிடும் எண்ணம் சிறிதும் இல்லை என்றும் விரைவில் சிம்பு நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.