close
Choose your channels

வேதாளம்' வெற்றியால் சேலம் விநியோகிஸ்தரின் அன்பு பரிசு

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் வேதாளம்' திரைப்படம், தொடரும் கனமழையிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதால் மொத்த வசூல் தொகை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

'வேதாளம்' திரைப்படம் சேலம் மாநகரில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். எதிர்பார்த்ததைவிட மிக அதிக லாபம் கொடுத்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ள சேலம் விநியோகிஸ்தர், 'தல அஜீத்தின்' படம் கொண்ட 2016ஆம் ஆண்டு காலண்டரை அச்சிட கொடுத்துள்ளதாகவும், சேலம் நகரம் முழுவதும் விரைவில் தனது அன்பு பரிசாக, இந்த காலண்டர்களை விநியோகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் 'வேதாளம்' படத்தில் லட்சுமிமேனன் தோழியாக ஒரு சிறு கேரக்டரில் நடித்த நடிகை வித்யூலேகா ராமன், இரண்டாவது முறையாக தனது குடும்பத்துடன் சென்று 'வேதாளம்' படத்தை பார்த்து மகிழ்ந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.