close
Choose your channels

அதர்வாவின் 'வெண்ணிலா தங்கச்சி'யை ரிலீஸ் செய்யும் சமந்தா

Tuesday, June 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா, ரெஜினா நடிப்பில் இளவரசு ஓடம் இயக்கி வரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் கம்போஸ் செய்த 'வெண்ணிலா தங்கச்சி' என்ற சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை பிரபல நடிகை சமந்தா வெளியிடவுள்ளார். அதர்வாவின் முதல்படமான 'பாணா காத்தாடி' படத்தில் சமந்தாதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, ரெஜினா, ப்ரணிதா, ஐஸவர்யா ராஜேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தாஇ அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து வருகிறார். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவில், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.