close
Choose your channels

பிரபல தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் விஜய்-சமந்தா

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. குறைந்த பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்கள் இன்றி வெற்றி படம் எடுப்பதே ர்ராமநாரயணனின் ஃபார்முலா. இந்த நிலையில் அவரது மறைவுக்கு இந்த நிறுவனத்தின் பொறுப்பேற்ற அவரது மகன் முரளிராமசாமி பெரிய பட்ஜெட் படங்களையும் தற்போது துணிச்சலாக எடுத்து வருகிறார்.

ஒரே நேரத்தில் 'தளபதி 61', 'சங்கமித்ரா' ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வரும் முரளி ராமசாமி நேற்று தனது பிறந்த நாளை சென்னையில் தனது அலுவலகத்தில் கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் இளையதளபதி விஜய் கலந்து கொண்டதால் முரளிராமசாமி அவர்களுக்கு இந்த பிறந்த நாள் மறக்க முடியாத பிறந்த நாளாக அமைந்துள்ளது.

விஜய் மட்டுமின்றி இயக்குனர் அட்லி, சமந்தா உள்பட பலர் இந்த பிறந்த நாளில் கலந்து கொண்டனர். தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் முரளிராமசாமி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.