close
Choose your channels

விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு எப்போது?

Monday, September 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இதனால் விஷால் உள்பட படக்குழுவினர் உற்சாகத்துடன் இருக்கும் நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த வெற்றிப்படமான 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது. 

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரன் ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் நெகட்டிவ் கேரக்டர் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.