close
Choose your channels

தளபதியின் 'மெர்சல்' படத்தில் திடீரென இணைந்த சந்தானம்

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் சந்தானம் மற்றும் சமந்தா காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இந்த காட்சிகள் படத்தில் உள்ள முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக மாறிய பின்னர் அஜித் உள்பட பெரிய ஹீரோக்கள் பலர் கேட்டுக்கொண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க மறுத்த சந்தானம், 'மெர்சல்' படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒருவேளை நாளைய 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கலந்து கொண்டால், இந்த படத்தில் தன்னுடைய பங்கு குறித்து மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.