close
Choose your channels

உதயநிதியுடன் முதல்முறையாக இணையும் இசையமைப்பாளர்

Wednesday, July 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா மீண்டும் ஒருமுறை அவருடன் இணையும் திரைப்படம் 'ஜாலி எல்.எல்.பி' ரீமேக் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'இதயம் முரளி' என்ற படத்தை இயக்குவதாக இருந்த 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அஹமது இந்த படத்தை இயக்கவுள்ளார்.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் அர்ஷத் வர்சி வேடத்தில் உதயநிதியும், பொம்ரானி இரானி வேடத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் சவுரப் சுக்லா வேடத்தில் ராதாரவியும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதியின் படத்திற்கு சந்தோஷ் நாராணயன் இசையமைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உதயநிதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் 'கெத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். திருக்குமரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் ஜாலி எல்.எல்.பி' தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.