close
Choose your channels

என்கிட்டே எதுவும் இல்லை. அவங்களா பார்த்து ஏதாவது கொடுத்துட்டு போனால்தான் உண்டு. ரெய்டு குறித்து சரத்குமார்

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சிக்கியது என்ன? என்பது குறித்து மாலை தெரியும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தனது வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நான், முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொள்கின்றனர் என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் இன்று முதல் நான் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். எனவே, எனது பிரசாரப் பயணத்தைத் தடுக்கத் திட்டமிட்டே, வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக நான் நினைக்கிறேன். என் வீட்டில் இருந்து எதுவும் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. அவர்கள் எடுத்துச் செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்" என்று கூறினார்.

முன்னதாக சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்துள்ளனர் என்பதும் சரத்குமார் வீட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.