close
Choose your channels

ரஜினிகாந்த் ஒரு வெடிக்காத பட்டாசு. சீமான்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்று யார்? என்று அனைவரும் கூறிக்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது காமராஜர், கக்கனுக்கு மாற்று யார் என்பதுதான். சிறந்த சினிமா நடிகர் இங்கு தேவையில்லை, தோழர் ஜீவானந்தம் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர்தான் இந்த நாட்டிற்கு தேவை.

ரஜினிக்கு அரசியல் தேவையில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். அதையும் மீறி அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய பட்டாசாக இருந்தாலும் அது வெடிக்காமல் புஸ் என்று போகும் பட்டாசு நிலைதான் ரஜினிக்கு ஏற்பட்டும்' என்று கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்து அணுகுண்டு போல் வெடிப்பாரா? அல்லது சீமான் கூறியது போல் புஸ் என்று வெடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.