close
Choose your channels

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

Wednesday, May 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்த நடிகர் சசிகுமார், விரைவில் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் இயக்கிய 'தர்மதுரை' திரைப்படத்தில் பாடல் எழுதிய வைரமுத்துவுக்கு அவர்களுக்கும் தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'நடிகர் சசிக்குமாரை சந்தித்தேன் ஒரு.கதையும் சொன்னேன், விரைவில் என் படத்தில் அவர் நடிப்பார்' என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.
சீனுராமசாமி, சசிகுமார் ஆகிய இரண்டு பேரும் இணையும் இந்த படம் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.