close
Choose your channels

செல்வராகவனின் 'கான்' படத்தில் சிம்புவின் கேரக்டர்

Thursday, August 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் இளையதளபதி விஜய்யின் உதவியால் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது சிம்பு 'இது நம்ம ஆளு, கான், 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இவற்றில் செல்வராகவன் இயக்கும் 'கான்' படத்தில் சிம்பு இதுவரை இல்லாத வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.


பொதுவாக செல்வராகவன் படங்களின் கதை மற்றும் கேரக்டர்கள் குறித்த செய்திகள் படம் ரிலீஸாகும் வரை வெளிவராது. ஆனால் 'கான்' படத்தின் கதையும், அதில் நடிக்கவிருக்கும் சிம்புவின் கேரக்டரும் தற்போது தற்செயலாக வெளிவந்து விட்டது.

மகேஷ்பாபுவின் செல்வந்தன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் அந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ஜெகபதிபாபுவும் கலந்து கொண்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தான் நடித்து கொண்டிருக்கும் 'கான்' படத்தை பற்றி கூறும்போது, இந்த படத்தில் தானும் சிம்புவும் 'ரா' அதிகாரி வேடத்தில் நடித்து வருவதாகவும், குடி, புகைப்பழக்கம், கெட்ட குணம் போன்ற கெட்ட பழக்கவழக்கத்தினால் தான் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும், அதன்பின்னர் சிம்புவுக்கும் தனக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை' என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டியில் இருந்து சிம்பு 'கான்' படத்தில் 'ரா' அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.