close
Choose your channels

'நானும் ரெளடிதான்' கூட்டணியில் இணைந்த செல்வராகவன்?

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி-நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் எதிர்பாராத சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. இந்நிலையில் மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தை தான் இயக்கவில்லை என தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மறுத்துள்ள நிலையில், இந்த படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கவுள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் சிம்பு நடித்த 'கான்' படத்தை கைவிட்ட செல்வராகவன், தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது.

செல்வராகவன்-தனுஷ்-விஜய்சேதுபதி என மூன்று பிரபலங்கள் ஒரே படத்தில் இணையவுள்ளதால், இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.