close
Choose your channels

ஷாருக்கானுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்!

Thursday, June 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் பாட்ஷா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கானுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு திரையுலகினரும் ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் 11 படங்கள் மட்டுமே நடித்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஷாருக்கானுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஷாருக்கானுடன் சிவகார்த்திகேயன் இணைவது திரைப்படத்தில் அல்ல, ஒரு விழாவில்...ஆம், விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'விக்ரம் வேதா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 'விக்ரம் வேதா' படத்தின் டிரைலரை ஷாருக்கானும் சிவகார்த்திகேயனும் இணைந்து வெளியிடவுள்ளனர்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படத்தில் மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.