close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் பாடும் பாடல்

Saturday, October 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 'புலி' படத்தில் இடம்பெற்ற 'ஏண்டி ஏண்டி' பாடல் படத்தின் ரிலீஸுக்கு பின்னரும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய், ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடலை பெரும்பாலும் அனைத்து ஊடகங்களும் தங்கள் விமர்சனங்களில் பாராட்டியுள்ளது.

இந்நிலையில் விஜய் படத்தில் சூப்பர் ஹிட் பாடலை பாடிய ஸ்ருதிஹாசன் தற்போது அஜீத் படத்திலும் ஒரு பாடலை பாடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த பாடலை ஸ்ருதிஹாசன், அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத்தின் இசையில் ஏற்கனவே '3' படத்தில் ஸ்ருதிஹாசன் பாடியிருந்தாலும், அஜீத்தின் 'வேதாளம்' படத்திற்காக பாடுவது அவருக்கு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அனிருத் இசையில், ஸ்ருதிஹாசன் , அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பாடலின் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்று அஜீத், ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் படக்குழுவினர்களை கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கான பதிலை விரைவில் படக்குழுவினர் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.