close
Choose your channels

'தல 56' படத்தில் ஸ்ருதிஹாசன் வழக்கறிஞரா?

Thursday, July 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

அஜீத் இந்த படத்தில் டாக்சி டிரைவராக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நிலையில், அஜீத் டாக்சி டிரைவர் யூனிபார்மிலும், ஸ்ருதிஹாசன் வழக்கறிஞர் உடையிலும் இருப்பது போன்ற ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங், சூரி, அஸ்வின் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை வெளிநாட்டு காட்சிகளுடன் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.