close
Choose your channels

கமல் பட டைட்டில் வைத்த சிபிராஜூக்கு கமல் பாராட்டு

Saturday, February 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'சைத்தான்' இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'சத்யா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1988ஆம் ஆண்டு கமல், அமலா நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வெற்றிப்படம் ஒன்று வெளிவந்தது. இந்த டைட்டிலை பயன்படுத்த சமீபத்தில் சிபிராஜ் தனது படக்குழுவினர்களுடன் கமலை சந்தித்து அனுமதி கேட்டதாகவும், அதற்கு கமல் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் 'சத்யா' ஃபர்ஸ்ட்லுக்கை கமல் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். கமல் தனது 'சத்யா' படத்தில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் போலவே தாடி வைத்து நடித்திருந்தார். அதே கெட்டப்பில் தற்போது சிபிராஜ் நடித்து வருவதற்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சைமன் இசையமைக்கின்றார். சத்யராஜ் தயாரிக்கும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.