close
Choose your channels

சிம்புவுக்கு கவுதம் மேனன் கொடுத்த ரோல் என்ன?

Thursday, April 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது சிம்பு, போலீஸ் உடையில் இருந்தார். இருவரும் இணைந்து எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதிலிருந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுக்கு போலீஸ் கேரக்டர் என்பதாக செய்தி பரவியது. ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து கருத்து கூறியபோது, 'இந்த படத்தில் சிம்பு போலீஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் ஆனால் சிம்புவின் போலீஸ் கெட்டப் ஒரு சஸ்பென்ஸ் என்றும் கூறினர்.
கவுதம் மேனன் தயாரித்து இயக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.