close
Choose your channels

சிம்புவின் அஸ்வின் தாத்தா' டீசர் ரிலீஸ் தேதி

Friday, March 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதன்முதலாக சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்மார்ட் இளைஞன் என மூன்று கேரக்டர்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் இரண்டு கேரக்டர்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது கேரக்டரின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அஸ்வின் தாத்தா கேரக்டரின் டீசர் தயாராகி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் நாளை அதாவது மார்ச் 18ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் டீசரான மதுரை மைக்கேல் டீசரை போலவே இந்த அஸ்வின் தாத்தா டீசரும் சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.