close
Choose your channels

செப்டம்பரில் சிம்புவின் அடுத்த படம் ரிலீஸ்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து, சிம்புவின் அடுத்த படம் 'கெட்டவன்' என்றும் 'பில்லா 3' என்றும் வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு சமீபத்தில் சிம்பு தனது டுவிட்டரில் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்தை வரும் செப்டம்பரில் ரிலீஸ்செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்காக சிம்பு அட்டகாசமான பல டியூன்களை போட்டு அவற்றில் தேவையான டியூன்களை எடுத்து கொள்ளும் சுதந்திரத்தை தனக்கு கொடுத்துள்ளதாக இயக்குனர் சேதுராமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிம்புவின் இசையில் வெளியாகும் முதல் திரைப்படபாடலுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.