close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முதலாக சிம்ரன்

Friday, June 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ரஜினிமுருகன்' வெற்றி படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை பொன்ராம் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியை செய்கிறார். முத்துராஜ் கலை இயக்கத்தில், அனல் அரசு சண்டைப்பயிற்சியில் உருவாகவுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
சிவகார்த்திகேயன், சமந்தா முதல்முதலில் ஜோடி சேரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நெப்போலியன் மற்றும் சிம்ரன் நடிக்கவுள்ளனர். சிவகார்த்திகேயன் படத்தில் இவர்கள் இருவரும் நடிப்பது இதுவே முதல் முறை. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லால் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.