close
Choose your channels

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தில் சிங்கப்பூர் வில்லன்

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவான 'மிருதன்' படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. 'மிருதன்' திரைப்படம் தமிழின் முதல் ஜாம்பி படமாக இருந்த் நிலையில் இந்த படம் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் தமிழ் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 'KL Gangster' உள்பட பல வெற்றி படங்களில் நடித்த ஆரோன் அஜீஸ், பல இந்திய படங்களின் வாய்ப்புகள் வந்தபோதிலும் அதில் நடிக்க மறுத்துள்ளார். ஆனால் 'டிக் டிக் டிக்' படத்தின் கதையும் அவருடைய கேரக்டரும் அவருக்கு மிகவும் பிடித்து போக உடனே தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தயாரிப்பான “டிக் டிக் டிக்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பிரம்மாண்டாக மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருகிறது.

முதல் விண்வெளி படம், ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி, பிரம்மாண்ட தயாரிப்பு, ஆரோன் அஜீஸின் வருகை, ஆகியவை இப்படத்தின் எதிர்பார்ப்பை விண்ணையும் எட்டும் வண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.