close
Choose your channels

கமல்ஹாசன் படத்திற்கு சிங்கப்பூரில் ஏற்பட்ட சிக்கல்

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் சென்சார் அதிகாரிகள் நேற்று இந்த படத்தை பார்த்து NC 16' என்ற சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

இதனால் 16வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமியர் இந்த படத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ஆடியன்ஸ்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த படத்திற்கு சிறுவர்கள் அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில் சிங்கப்பூரில் மட்டும் இந்த படத்திற்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த 'தூங்காவனம்' படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.