close
Choose your channels

அஜீத் போட்டோஷூட்டிற்கு கைமேல் பலன் பெற்ற அப்புக்குட்டி

Wednesday, July 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமான அப்புக்குட்டி அதன்பின்னர் 'அழகர்சாமியின் குதிரை, குள்ளநரிக்கூட்டம், மன்னாரு, மரியான், வீரம் போன்ற பல படங்களில் நடித்தார். அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற அப்புக்குட்டி, அதன் பின்னர் அதே போன்ற ஹீரோ வேடங்களுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் அஜீத், அப்புக்குட்டியை விதவிதமாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தார். அஜீத் புண்ணியத்தால் இணையதளத்தில் பிரபலமான அப்புக்குட்டிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.

அப்புக்குட்டி தற்போது 'சுழியம் ஏழு' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அப்புக்குட்டி கேரக்டரின் பெயர் சிவபாலன். அஜீத்தின் போட்டோஷூட்டின்போது அப்புக்குட்டி என்ற தனது பெயரை சிவபாலன் என்று மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பெயரில் அமைந்த ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

பெற்றோர் பார்க்கும் பெண் வேண்டாம் என மறுத்து, காதலித்தே திருமணம் செய்வேன் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒருவனின் கதைதான் சுழியம் ஏழு'. இந்த படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக குட்டி மீனா நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.