close
Choose your channels

விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணையும் கருணாகரன்

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராகிய கருணாகரன், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குறிப்பாக அஜித்துடன் முதல்முறையாக அவர் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'சிவகார்த்திகேயனுடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள்' என்று ரசிகர் ஒருவர் இணையதளத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாகரன், 'நானும் அந்த நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறினார். அப்போது சிவகார்த்திகேயன் 'அது விரைவில் நடக்கும்' என்று பதிலளித்துள்ளார். இதற்கு கருணாரன் நன்றி தெரிவித்துள்ளார்.

கருணாகரன் இதுவரை அஜித், தனுஷ், ஆர்யா, விஷ்ணு, அதர்வா, உதயநிதி, சிபி, போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். விரைவில் அவர் விஜய், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.