close
Choose your channels

தமிழில் அரைசதம். தெலுங்கில் ஆரம்பம். ரெமோவின் சாதனை

Friday, November 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகியது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளியது. சிவகார்த்திகேயன் படங்களில் பெஸ்ட் வசூல் இந்த படம்தான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகிறது. இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழில் பெற்ற வெற்றி தெலுங்கிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த படம் இன்று முதல் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தமிழில் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அரைசதம் அடித்து சாதனை செய்த இந்த படம் தெலுங்கில் முழுசதம் அடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.