close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவாரா விக்னேஷ் சிவன்?

Thursday, November 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள விக்னேஷ் சிவன், 'நானும் ரெளடிதான்' வெளியாகி ஒருமாதம் கூட இன்னும் முடியவில்லை. நான் என்னுடைய அடுத்த படத்திற்கு இன்னும் தயாராகவில்லை. கதை, திரைக்கதை முடிவான பின்னர்தான் அந்த படத்தின் ஹீரோ யார்? என்பதை தீர்மானிப்பேன். இப்போதைக்கு அடுத்த படம் குறித்து எதுவும் கூற முடியாது. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் இசையில் ஒரு பாடலை மட்டும் எழுதியுள்ளேன். எதிர்காலத்தில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்' என்று கூறியுள்ளார்.

ஆனால் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியிருப்பதாகவும், இப்போதைக்கு சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் படம் வர வாய்ப்பு இல்லை என்றும் கோலிவுட் செய்திகள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.