close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி

Saturday, November 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் திரைப்பட நிறுவனம் ஒரு படத்திற்கு பூஜை போட்ட அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து அதன்படி சரியாக திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வார்கள்.
இந்த அளவுக்கு துல்லியமாக திட்டமிடும் நிறுவனங்கள் தற்போது இல்லை என்று பலர் ஆதங்கப்படும் நிலையில் ஒரே ஒரு படத்தை தயாரித்து அந்த படத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு ரிலீஸ் தேதியை சரியாக அறிவித்த நிறுவனம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
தனது முதல் படமான 'ரெமோ' படத்தை திட்டமிட்டபடி சரியாக ரிலீஸ் செய்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆர்.டி.ராஜா, தனது இரண்டாவது படமான மோகன் ராஜா இயகக்த்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதியையும் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.