close
Choose your channels

சூப்பர் ஹிட் இயக்குனருடன் முதன்முதலாக இணையும் அனிருத்

Sunday, April 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுடனும் ஆரி, விஜய்சேதுபதி போன்ற இளையதலைமுறை நடிகர்களுடன் நடித்து வரும் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜெயம் ராஜா இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை மற்றும் ரெமோ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மீண்டும் அவர் படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 'நானும் ரெளடிதான்' படத்திற்கு பின்னர் அனிருத் இசையமைக்கும் படத்தில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கின்றார்.
இருப்பினும் ஜெயம் ராஜாவுடன் முதன்முதலாக இந்த படத்தில் அனிருத் இணைகின்றார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதே நிறுவனம்தான் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்துவரும் 'ரெமோ' படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.