close
Choose your channels

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Friday, November 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில், ஒருசில பொருளாதார பிரச்சனையால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் இப்படம் ரிலீஸாகும் என அறிவித்தபோதிலும் அந்த அறிவிப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 'ரஜினிமுருகன்' பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிட்டதாகவும், எனவே வரும் டிசம்பர் மாதம் 'ரஜினிமுருகன்' திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாளை மறுநாள் ஞாயிறு முதல் தினசரி நாளிதழில் ரிலீஸ் தேதியுடன் கூடிய அதிகாரபூர்வ விளம்பரம் வரும் என்று கூறப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.