close
Choose your channels

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும் ஒருசில ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்று முன்னர் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.