close
Choose your channels

முதல்படியை தாண்டியது சிவகார்த்திகேயனின் வெற்றி கூட்டணி

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக மாஸ் ஓப்பனிங் படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'வருத்தப்படாத வாலிப சங்கம், 'ரஜினிமுருகன்' இயக்குனர் பொன்ராம் அவர்களுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வந்தது. இந்த வெற்றி கூட்டணியின் முதல்கட்ட படப்பிடிப்பான 34 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான '24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் - சமந்தா முதல்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைப்பில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கவிஞர் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். டி.முத்துராஜ் கலை இயக்குனராகவும், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசும் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.