close
Choose your channels

பிரபல நடிகரின் மகனுக்கு கைகொடுத்து உதவும் சிவகார்த்திகேயன்

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகும் 'அதாகப்பட்டது ஜனங்களே' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் உமாபதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், பாண்டியராஜன், நரேன், மனோபாலா, யோக்ஜேபி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ர.இன்பசேகர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தின் கதை ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த ஒரு பயணம் ஆகும். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக 'ஏனடி நீ என்னை இப்படி' என்ற பாடல் எப்.எம் வானொலிகள் உள்பட பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ளது.

'அட்டகத்தி' மற்றும் 'குக்கூ' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா வர்மாவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜி.மதன் படத்தொகுப்பு செய்துள்ளார். சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவரமேஷ்குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் அதாவது ஜூன் 8ம் தேதி வெளியாகவுள்ளது. கோலிவுட் திரையுலகில் வளரவேண்டிய ஒரு இளம் நட்சத்திரத்தை கைதூக்கிவிடும் வகையில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.