close
Choose your channels

மதுரை மருத்துவரிடம் பரவை முனியம்மா உடல் நிலையை விசாரித்த சிவகார்த்திகேயன்

Thursday, July 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிராமியப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமாரும், தனிப்பட்ட முறையில் விஷாலும் உதவி செய்ததை நேற்று பார்த்தோம். இந்நிலையில் பரவை முனியமாவின் உடல்நிலையை கேள்விப்பட்டு நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் அவருக்கு நிதியுதவி செய்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் பரவை முனியம்மாவுடன் மான்கராத்தே படத்திற்காக 'ராயபுரம் பீட்டர்' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடிகர் சிவகார்த்திகேயன், தனது பிசியான படப்பிடிப்பு ஷெட்யூல்டுகளுக்கு மத்தியில் மதுரைக்கு சென்று, பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் காலஞ்சென்ற முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ராமேஸ்வரத்தில் இறுதியஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.