close
Choose your channels

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது. தொடர்ச்சியாக பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருவதால் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். எனவே அடுத்த மாதம் இந்த படம் வெளிவருவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.