close
Choose your channels

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

Saturday, June 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்த த்ரில் படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 23ல் சிம்புவின் 'AAA' மற்றும் ஜெயம் ரவியின் 'வனமகன்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளிப்போயுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்றைய விளம்பரத்தில் கூட 'ஜூன் வெளியீடு' என்று கூறப்பட்டுள்ளதால் இந்த படம் ஜூ30 ஆம் தேதி வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புதிய டிரைலர் அடுத்த இரண்டு நாட்களில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.