close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவாரா?

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், 'கோச்சடையா', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது 'விஐபி 2' படத்தின் புரமோஷன்களில் பிசியாக உள்ளார். இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த செளந்தர்யா ரஜினிகாந்த், 'எந்த நடிகரை எதிர்காலத்தில் இயக்க விரும்புகின்றீர்கள்' என்ற கேள்விக்கு அவர் 'அஜித்' என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதிலில் இருந்து அஜித் படத்தை இயக்க செளந்தர்யா ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை செளந்தர்யாவுக்கு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.