close
Choose your channels

கமல்-விஜய்க்கு மறக்க முடியாத நாளாக மாறிய ஆகஸ்ட்-2

Monday, August 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு இனிய நாளாக முடிந்தது. நேற்று வெளியான 'புலி' படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 2 என்ற நாளை இன்னும் கொஞ்சம் நாளைக்கு விஜய் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.


இந்நிலையில் இதே நாள் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஒரு முக்கியத்துவமான நாளாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் திரைக்கதையில் இந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மிகவும் முக்கியமான ஒரு நாளாக வரும். சுயம்புலிங்கமாக நடித்திருந்த கமல், ஆகஸ்ட் 2ஆம் தேதிதான் தென்காசிக்கு குடும்பத்தோடு சென்றதாக அனைவரையும் நம்ப வைக்க கடைசி வரை போராடி அதில் வெற்றியும் பெறுவார்.

எனவே இதை ஞாபகப்படுத்தும் வகையில் கமல் ரசிகர்களும் இதுகுறித்து ஏராளமான டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கமல்ஹாசனின் 'பாபநாசம்' திரைப்படத்திற்கு பின்னர் பல புதிய திரைப்படங்கள் ரிலீஸானபோதிலும் இன்னும் ஐந்தாவது வாரமாக வெற்றிகரமாக இந்த படம் தமிழகம் முழுவதிலும் ஓடிக்கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளிவந்த கமல் படங்களில் சத்தமில்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery : Vijay's 'Puli' Audio Launch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.