close
Choose your channels

'விவேகம்' இடத்தை பிடித்த மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

Thursday, September 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'ஸ்பைடர்' படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளது. மகேஷ்பாபுவுக்கு சென்னையில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை பெற பெரிய நிறுவனங்களின் போட்டிகள் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை ஜாஸ் சினிமாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் சமீபத்தில் தல அஜித்தின் 'விவேகம்' படத்தை சென்னையில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.  ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.