close
Choose your channels

ஸ்ருதிஹாசனுடன் நடித்த உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

Friday, April 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த 'நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் தந்தை கமலுடன் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தற்போது உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரகளுடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உள்ள இந்தியாவை சேர்ந்த விராத் கோஹ்லி, மேற்கிந்திய தீவுகள் நாட்டை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் ஆகியோர்கள் நடிக்கும் விளம்பர படம் ஒன்றில் ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார்.

பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சமிபத்தில் பெங்களூரில் நடைபெற்றதாகவும், இந்த விளம்பரம் விரைவில் தொலைக்காட்சிகளில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.