close
Choose your channels

சிம்புவின் 'AAA' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடனும், கடைசி நேர டென்ஷன்களையும் மீறி கடந்த வெள்ளியன்று வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்தபோதிலும் படிப்படியாக வசூல் குறைந்ததாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 22 திரையரங்குகளில் 278 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,13,83,190 வசூலித்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.