close
Choose your channels

'பாகுபலி' பாணியில் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா

Tuesday, May 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர சாதனை திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இதேபாணியில் கோலிவுட்டில் மேலும் ஒருசில படங்கள் இரண்டு பாகங்களில் தயாராகி வருகின்றன. சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன், 'தனுஷின் 'வடசென்னை' ஆகிய படங்கள் இதற்கு உதாரணங்கள்
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படமும் இரண்டு பாகங்களில் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும், மே 18ஆம் தேதியன்று டைட்டில் லுக் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.