close
Choose your channels

மூன்றாவது வாரத்திலும் முன்னிலை வசூல் பெற்றுள்ள 'மாநகரம்'

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளையதலைமுறை இயக்குனர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி திரைப்படங்களை உருவாக்குவதால் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு அமைந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 'துருவங்கள் 16' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்றது போலவே தற்போது இன்னொரு அறிமுக இயக்குனரான லோகேஷ் கணேஷ் இயக்கிய 'மாநகரம்' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'மாநகரம்' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 11 திரையரங்குகளில் 81 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.23,54,220 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் இந்த படத்தின் முதல் வார வசூலை விட மூன்றாவது வார வசூல் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த 10ஆம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை சென்னையில் ரூ.,1,07,84,030 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வருடத்தின் மூன்றாவது ஹிட் படம் 'மாநகரம்' என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.