close
Choose your channels

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'. எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான இந்த படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் மிக விரைவில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதை அடுத்து தற்போது வியாராபத்தையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை லைகா நிறுவனத்தின் ராஜூ மஹாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் வியாபாரமான சாட்டிலைட் உரிமையின் வியாபாரமே சாதனை செய்துள்ள சுப்ப்பர் ஸ்டாரின் இந்த படம் இன்னும் என்னென்ன சாதனைகள் செய்யபோகிறதோ? என்று கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.