close
Choose your channels

ரஜினியுடன் படித்தாரா சுஹாசினி? புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி 'தாய் வீடு', 'தர்மத்தின் தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் இருவரும் சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக புகைப்படத்துடன் பரவியது.

ஆனால் இந்த செய்தியை சுஹாசினி தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜானி' படத்தில் தான் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்ததாகவும், அப்போது எடுத்த புகைப்படம்தான் அது என்றும், ரஜினியுடன் தான் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தேன் என்பது தவறான தகவல் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கிய 'ஜானி' படம் மட்டுமின்றி அவர் இயக்கிய மற்றொரு வெற்றி படமான 'உதிரிப்பூக்கள்' படத்திலும் சுஹாசினி உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.