close
Choose your channels

ரஜினியின் 'காலா' இன்று முதல் வேற லெவல் படப்பிடிப்பு

Wednesday, June 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது. மும்பை டான் மற்றும் முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் உறுதி செய்துள்ளார். தான் மிகவும் மதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசியோடு இன்று முதல் ஸ்டண்ட் காட்சிகளை இயகக்வுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 'கபாலி படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை விட இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.