close
Choose your channels

நான் ஒரு பச்சைத்தமிழன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றுடன் முதல்கட்ட ரசிகர்களுடனான சந்திப்பு முடிவடைந்தது. ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாள் ரஜினி பேசிய சில அரசியல் கருத்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவதந்திகள் பரவிய நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி சில கருத்துக்களை கூறினார். அவர் பேசியதன் முழு விபரம் இதோ:

"என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருகமக்களே, ஊடக நண்பர்களே, பத்திரிக்கை நண்பர்களே அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது, பழகினது இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்த தெரிவிச்சிக்கிறேன். இந்த ஒழுக்கம் தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்லாமல் எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்த நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைபிடிக்க வேண்டும். இந்த ஒரு விழா - ரசிகர்களை சந்திக்கும் விழாவை ஏற்பாடு செய்து அற்புதமாக நிர்வகித்த சுதாகருக்கு மற்றும் இவர்களுக்கு எல்லாம் நாயகனாக இருந்த என் உயிர்க்கும் மேலான முரளிபிரசாத், சிவாராம கிருஷ்ணன், பாபா அவர்களுக்கும் அனைத்து ராகவேந்திரா மண்டப ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிம் பாய்ஸ், பொதுமக்கள், போலீஸ் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

முதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு நான் அரசியல் வந்தால் எப்படி இருக்கனும், சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையா வாதப்பொருளா இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்பு தான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம், ஆனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போயிட்டாங்க. அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தா கூட நீங்க என்ன ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். எங்க மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க, அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

நீங்க என்னை தூக்கிப்போட்ட நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல. சரி அதுக்கு நீ என்ன சரிசெய்வது அப்படீன்னு சொன்னா. ஆமாம் இருக்காங்க, தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி, அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலீத் மக்களுக்காக உழைக்கிறார். சீமான், போராளி அவர் கருத்துக்களை கேட்டு பிரம்மிச்சு போயிருக்கேன் அது போல இன்னும் இருக்காங்க சில தேசிய கட்சிகள். ஆனால் அமைப்பு கெட்டு போயிருக்கே.

அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் மனரீதியை, சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்."

என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப் பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சியடைய முடியும்”. நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாம் செடி வளர தேவையான உரம் மாதிரி, அவர்கள் நம் வளர்ச்சிக்கே உதவுகிறார்கள்.

"ஒருமுறை புத்தர் தன் சீடர்களோடு சென்றபோது, வழியில் சிலர் புத்தரை திட்டிக்கொண்டிருந்தார். அதை கேட்ட புத்தர் அமைதியாக நிற்க உடன் வந்த சீடர்களும் அமைதியாக நின்றனர். அந்த நபர் சென்ற பின், சீடர்கள் புத்தரிடம் கேட்டனர். அதற்கு புத்தர் சொன்னார், அவர் திட்டிக்கொட்டினார் ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது அவருடனையே சென்றுவிட்டது”, என்று கூறினார்.

பழைய காலத்தில ராஜக்கள் கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது, ஆயிரக் கணக்கில் தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரை அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அது போல நாம் அனைவரும் அவரவர் கடைமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம் என்று கேட்டுக்கொண்ட தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் "நேரம் வரும் போது போர்களத்தில் இறங்குவோம்", என்று கூறினார்.

ரஜினியின் இன்றைய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.