close
Choose your channels

'நீ சாதிச்சிட்ட'. சூப்பர் ஸ்டார் ரஜினிடம் பாராட்டு பெற்ற வெற்றி பட நடிகர்

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரின் மூலம் விஸ்வரூபம் எடுத்த அருண்விஜய் 'வெற்றிமாறன்' என்ற கேரக்டரில் நடித்த படம் 'குற்றம் 23'. சமீபத்தில் வெளிவந்த இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம் அருண்விஜய்யின் சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்தை பார்த்து அருண்விஜய்க்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'தனது முதிர்ச்சியான நடிப்பையும், பாடி லாங்க்வேஜையும் சூப்பர் ஸ்டார் பாராட்டியதாகவும், இந்த படத்தின் கான்செப்ட் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ரஜினிகாந்த், மொத்தத்தில் நீ சாதிச்சிட்ட' என்று அவர் கூறிய வார்த்தை தன்னை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது' என்று கூறியுள்ளார்.
அருண்விஜய், மஹிமா நம்பியார், தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, சுஜா வருனே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'ஈரம்' புகழ் அறிவழகன் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.