close
Choose your channels

மாஸ் படம்: விக்ரம் வேதா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

Thursday, July 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல வசூலை பெற்று வருகிறது. ஜிஎஸ்டி காரணமாக திரைப்படங்களின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்ட கருத்தை உடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அபாரமான வசூலை இந்த படம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக இந்த படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த பின்னர் 'அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ள ஒரு மாஸ் படம்' என்று ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினியின் பாராட்டிற்கு இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தங்களது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சூப்பர் ஹிட் ஆன முதல் படமான 'விக்ரம் வேதா' படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், மதயானை கூட்டம்' கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.