close
Choose your channels

இந்தியாவின் 50 சக்திவாய்ந்த பட்டியலில் ரஜினி-கமல்

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா டுடே ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 நபர்களின் பட்டியல் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இவர்தான் கடந்த ஆண்டும் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் கோலிவுட்டின் மூத்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு முதல்முறையாக இடம் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் 34-வது இடத்திலும் கமல்ஹாசன் 45-வது இடத்திலும் உள்ளனர்.
சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களின் விபரங்கள்:
  1. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனர்)
  2. ரத்தன் டாடா (டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர்)
  3. கே.எம்.பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர்)
  4. கெளதம் அதானி (அதானி குழுமத் தலைவர்)
  5. பாபுராம்தேவ்
  6. ஆனந்த் மகிந்த்ரா (மகிந்திரா குரூப்)
  7. உதய் கோடாக் (கோடாக் மகிந்திரா நிறுவனம்)
  8. திலிப் சங்வி (தொழிலதிபர்)
  9. ஆசிம் பிரேம்ஜி ( விப்ரோ நிறுவன சேர்மன்)
  10. என். சந்திரசேகரன் (டாடா சன்ஸ் போர்டு தலைவர்)
மேலும் இந்த பட்டியலில் சர்ச்சைக்குரிய பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 20வது இடத்திலும் எழுத்தாளர் குருமூர்த்திக்கு 30வது இடமும், ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு 36வது இடமும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கு 11 வது இடமும் கிடைத்துள்ளது.
மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 15வது இடமும், ஷாருக்கானுக்கு 40வது இடமும், அக்சயகுமாருக்கு 44வது இடமும் ,அமீர்கானுக்கு 47வது இடமும் கிடைத்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.